×

கம்பெனியில் பிரியாணி சாப்பிட்ட 90 ஊழியர்கள் மயக்கம்: கேட்டரிங் உரிமையாளர் மீது வழக்கு

சென்னை, ஜூன் 6: பெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் கார்களுக்கு கேபிள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு, 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். கடந்த 3ம் தேதி தொழிற்சாலையில் மதிய உணவாக பிரியாணி சாப்பிட்ட பெண் தொழிலாளர்கள் 90க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், உடல் நலம் பாதிக்கப்பட்டது.

தொழிற்சாலையில் தரமற்ற உணவு விநியோகம் செய்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் கேட்டரிங் உரிமையாளர், சமையல் மாஸ்டர், உணவு விநியோகம் செய்தவர், சிக்கன் விநியோகம் செய்தவர்கள் மீது, பெரும்புதூர் போலீசார், காலாவதியான உணவு பொருட்களை விநியோகம் செய்தது, ஆதாரத்தை மறைத்து அழித்தது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.

Tags : Chennai ,Pillaipakkam Chipkot ,Perambudur ,
× RELATED சென்னையில் நாளை இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து..!