×

வாணியம்பாடியில் பிறந்து சில மணிநேரத்தில் பச்சிளம் சிசு

வாணியம்பாடி, ஜூன் 6: வாணியம்பாடியில் பிறந்து சில மணிநேரத்தில் பச்சிளம் சிசு சாலையில் வீசப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் நேற்று சாலையோரம் பிறந்து சிலமணிநேரமான ஆன நிலையில் பச்சிளம் சிசு பனிக்குடத்துடன் வீசப்பட்டுள்ளதாக வாணியம்பாடி டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற டவுன் போலீசார் குழந்தையை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு குழந்தை பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என தெரிவித்தனர். இதனையடுத்து குழந்தையை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பச்சிளம்குழந்தை வீசப்பட்ட பகுதியின் அருகிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பச்சிளம் சிசுவை சாலையோரம் வீசி சென்றது யார்? என பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Vaniyambadi ,Perumalpettai ,Tirupattur district… ,
× RELATED பேரணாம்பட்டு அருகே வனப்பகுதியில்...