×

பேராசிரியர் மா.நன்னன் வாழ்விணையர் மறைவு மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: தமிழுணர்வும் திராவிட இயக்கப் பற்றும் கொண்டு பெரியாரியப் பாதையில் வாழ்ந்து, நம் உள்ளங்களில் நிறைந்து வாழும் பேராசிரியர் மா.நன்னன் வாழ்விணையர் பார்வதி நன்னன் மறைந்த துயர்மிகு செய்தி சொல்லொண்ணா வேதனையைத் தருகிறது. அவரது மறைவிற்கு நேரில் சென்று இரங்கலை தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்தேன்.

தமிழுக்கும் திராவிட இயக்கத்திற்கும் பெருந்தொண்டாற்றிய பேராசிரியர் மா.நன்னனது நூல்களை கடந்த 2023ம் ஆண்டு நான் முதல்வராக இருந்தபோது நாட்டுடைமையாக்கி, அதற்கான நூலுரிமை தொகையை வழங்கியபோது, பேராசிரியர் நன்னன் நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டு அவரோடு உரையாடிய தருணத்தை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

பேராசிரியர் மா.நன்னன் தொடங்கி வைத்த பணிகளை, இன்றளவும் தொய்வில்லாமல் தொடர்ந்துவரும் அவரது குடும்பத்தினரின் பணி போற்றுதலுக்குரியது. அந்த பணிக்குப் பெருந்துணையாக-தூணாக விளங்கிய பார்வதி நன்னன் அவர்களது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இந்த பேரிழப்பையும் கடந்து, பேராசிரியர் மா.நன்னன் தொடங்கிவைத்த பணிகளை, அவரது குடும்பத்தினர் தொடர்வார்கள்; பேராசிரியர் மா. நன்னன் – பார்வதி நன்னன் ஆகியோருக்கு நிச்சயம் புகழ் சேர்ப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : M.K. Stalin ,Ma. Nannan ,Chennai ,DMK ,Parvathy Nannan ,Periyar ,Dravidian movement ,
× RELATED திருச்செந்தூர் கோவில் முறைகேடுகள்...