×

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்காசி, நெல்லை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

மேலும் 11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை மையம் தெரவித்துள்ளது.

 

 

 

Tags : Nilgiris ,Coimbatore ,Chennai Meteorological Department ,Chennai ,Meteorological Department ,Tenkasi ,Nellai ,Theni ,Dindigul ,Tiruppur ,Kanyakumari ,
× RELATED முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசின்...