×

பாலியல் வன்கொடுமை ஓலங்களால் மக்கள் மனம் நடுங்குகிறது: அன்பில் மகேஷ்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஒளித்து வரும் பாலியல் வன்கொடுமை ஓலங்களால் மக்கள் மனம் நடுங்குகிறது என்று முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; திருச்சியில் 17 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் எனும் செய்தியைக் கேட்கும்போதே மனம் நடுங்குகிறது என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் இந்த ஓலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் அரசின் முதலமைச்சர் உடனடியாகத் தீவிர நடவடிக்கையை எடுக்க வேண்டும். மீண்டும் முந்தைய ஆட்சியை குறை சொல்லி, ஆக்ரோஷமாகப் பேசி மக்களைத் திசைதிருப்பாமல் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்துங்கள். ஆரோக்கியமான நடவடிக்கை எடுத்தால் எதிர்க்கட்சி பாராட்டவும் செய்யும். குற்றவாளிகள் சட்டத்தின்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மாணவிகள் மற்றும் பெண்களின் வருங்கால நம்பிக்கைக்கும் அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தியுள்ளார்.

Tags : Anbil Mahesh ,Chennai ,Former Minister ,Anbil Mahesh Poiyamozhi ,Tamil Nadu ,Trichy… ,
× RELATED தமிழ்நாடு மின்வாரிய தலைமை...