×

ஜூன் 10ல் தேசிய தொழிற் பழகுநர் முகாம்: சென்னை ஆட்சியர் அறிவிப்பு

சென்னை: மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் முகாம் வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ளது என சென்னை ஆட்சியர் தெரிவித்துள்ளார். தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி முகாம் ஆர்.கே.நகர். தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. ஐடிஐ மற்றும் 8, 10, 12 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை தொழிற் பழகுநராக தேர்வு செய்ய உள்ளனர். தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும். மாதாந்திர உதவித்தொகையாக குறைந்தபட்சம் ரூ.8,000 முதல் அதிகபட்சமாக ரூ.18,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

 

Tags : National Labour Camp ,Ruler ,Chennai ,governor ,National Occupational Habits Training Camp ,R. K. ,Nagar ,IDI ,
× RELATED சென்னை மெரினாவில் உள்ள கலைஞர்...