×

மின்கம்பம் சேதமடைந்த ஆபத்தான டிரான்ஸ்பார்மர் மாற்றப்படுமா?

ஜூன் 3: முள்ளக்காடு -அத்திமரப்பட்டி சாலையில் மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதனை மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி ஸ்பிக் நகரை அடுத்த முள்ளக்காடு பகுதியில் இருந்து அத்திமரப்பட்டி நோக்கி செல்லும் சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் பழுதடைந்து சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விரிசல் விழுந்த நிலையில் காணப்படுகிறது. மோசமான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை ஆய்வு செய்த மின்வாரிய அதிகாரிகள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு கம்பியால் டிரான்ஸ்பார்மரை தாங்கும் வகையில் டிரான்ஸ்பார்மருக்கு நடுவே கம்பியை பொருத்தினர். ஆனால் டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. மேலும் டிரான்ஸ்பார்மரை தாங்கும் வகையில் அமைக்கப்பட்ட இரும்பு கம்பியும், தற்போது அரித்த நிலையில் மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்பவர்கள் ஒருவித பதற்றத்துடன் செல்லும் சூழல் காணப்படுகிறது.

தற்போது பள்ளிகள் திறக்கும் சூழல் உள்ளதால் இந்த வழியாக செல்லும் மாணவ -மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு விரைவாக டிரான்ஸ்பார்மரை மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தட்டார்மடம் அருகே சாத்தான்குளம், ஜூன் 3: தட்டார்மடம் அருகே காரும், டிப்பர் லாரியும் நேருக்குநேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். ராமநாதபுரம் அருகே உள்ள அப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி மகன் ராமமூர்த்தி(42). இவரும், இவரது நண்பரான அழகர் மகன் ஜெயகுரு (50) என்பவரும் காரில் சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்த குடும்பத்தினரை அழைத்து செல்ல வந்தனர். காரை ராமமூர்த்தி ஓட்டினார். தட்டார்மடம் அருகே உள்ள நடுவக்குறிச்சி முத்தாரம்மன் கோயில் அருகில் வரும்போது எதிரே நாங்குநேரியை சேர்ந்த மாசானம் மகன் முருகன் என்பவர் ஓட்டி வந்த டிப்பர் லாரி, கார் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ஜெயகுரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராமமூர்த்தி படுகாயமடைந்தார். தகவலறிந்து தட்டார்மடம் போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்த ராமமூர்த்தியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த ஜெயகுரு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து டிப்பர் லாரி டிரைவர் முருகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Mullakkadu-Athimarapatti ,Mullakkadu ,Spi Nagar ,Thoothukudi ,Athimarapatti… ,
× RELATED தலைமை செயலக நுழைவாயில் அருகே தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு