×

ரூ.63,246 கோடி மதிப்பில் 3 வழித்தடங்களில் நடைபெறும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 52% பணிகள் நிறைவு: அடுத்த ஆண்டுக்குள் உயர்​மட்​ட ​பாதை பணியும் 2028க்குள் சுரங்க பணிகளும் முடியும் என தகவல்

சோழிங்கநல்லூர்: சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்தில் ஒட்​டுமொத்தமாக 52.55 சதவீத மெட்ரோ பாதை அமைக்கும் பணி​கள் நிறைவடைந்துள்ளதாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் முதற்கட்ட மெட்ேரா ரயில் திட்டத்தில், விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் என 2 வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையின் வளர்ச்சி மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3வது வழித்தடத்தில் 116.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதாவது, மாதவரம் – சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் – பூந்​தமல்லி வரை (26.1 கி.மீ.) 4வது வழித்தடத்திலும், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5வது வழித்தடத்திலும் பணி​கள் நடை​பெறுகின்றன. இந்த 2ம் கட்ட மெட்ரோ திட்டத்தில் மொத்​தம் 118 மெட்ரோ ரயில் நிலை​யங்கள் அமைக்க திட்​டமிட்டு, பணி​கள் நடைபெறுகின்றன. இதில், சுமார் 42.6 கி.மீ. சுரங்கப்பாதையில் 43 சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கப்பட​ உள்​ளன. இதில், சுமார் 42.6 கி.மீ. சுரங்கப் பாதை​யில் 43 சுரங்க ரயில் நிலை​யங்கள் அமைக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் கட்​டுமானப் பணி கடந்த 2020ம் ஆண்டு நவம்பரில் தொடங்கியது. சுரங்கப் பாதை பணியை பொருத்தவரை, மாதவரத்தில் கடந்த 2022ம் ஆண்டு அக்​டோபரில் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து, பசுமை வழிச்சாலை, கலங்கரை விளக்கம், சேத்​துப்பட்டு, பனகல் பூங்கா உட்பட பல்​வேறு இடங்களில் சுரங்கப் பாதை பணி​கள் தொடங்கின. பசுமைவழிச் சாலை அடை​யாறு, சேத்​துப்பட்டு ஸ்டெர்லிங் சாலை, அயனாவரம் பெரம்பூர், பனகல் பூங்கா கோடம்பாக்கம் சுரங்கப் பாதை பணி​கள் அடுத்தடுத்து நிறைவடைந்தன. கலங்கரை விளக்கம், மயி​லாப்பூர், ராயப்பேட்டை ஆர்​.கே.​சாலை, பசுமைவழிச் சாலை, மந்​தைவெளி ஆகிய சுரங்கப்பாதை பணி​களும் நிறைவடைந்துள்ளன. இதுதவிர, பல்​வேறு இடங்களில் சுரங்கப் பாதை பணி​கள் முழு​வீச்சில் நடை​பெறுகின்றன.

இதே​போல், உயர்மட்டப் பாதை பணி பொருத்தவரை 4வது வழித்தடத்தில் பூந்​தமல்லி, போரூர், வடபழனி தடத்தில் பணி​கள் நிறைவடைந்துள்ளன. அதே நேரத்தில், போரூர் – வடபழனி இடையே மெட்ரோ ரயில் நிலைய கட்​டுமானப் பணி​கள் நடை​பெறுகின்றன. வடபழனி, கோடம்பாக்கம், பவர்ஹவுஸ் பாதை​யில் தற்​போது தண்​டவாளம் அமைக்கும் பணி நடை​பெற்று வரு​கிறது. பல இடங்களிலும் உயர்மட்டப் பாதை பணி​களும் மும்​முரமாக நடை​பெறுகின்றன. இந்​நிலையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்தில் ஒட்​டுமொத்தமாக, 52.55 சதவீதம் பணி​கள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரிகள் கூறியதாவது:
2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்தில் முதல் மெட்ரோ ரயில் சேவை, 4வது வழித்தடத்தில் பூந்​தமல்லி, போரூர், வடபழனி தடத்தில் விரை​வில் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். இதையடுத்து, சென்னை வர்த்தக மையம், போரூர் பணி​களை முடிக்க உள்​ளோம். போரூர், கோயம்பேடு ஆகிய உயர்மட்டப்பாதை பணி​களும் முழு​வீச்சில் நடை​பெறுகின்றன. 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்தில் உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதை சேர்த்து நடப்பாண்டில் ஏப்​ரல் மாதம் வரை ஒட்டுமொத்தமாக 52.55 சதவீத பணி​கள் நிறைவடைந்துள்ளன.

சட்​டப்பேரவை தேர்​தல் காரணமாக, மேற்​குவங்கம், அஸ்​ஸாம் உள்​ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் 2 மாதங்களாக சொந்த ஊருக்கு சென்று இருந்தனர். தற்​போது, பெரும்பாலான தொழிலாளர்கள் திரும்பி வந்​துள்ளனர். மீண்​டும் பணி​கள் தீவிரமடைந்துள்ளன. 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்தில், வரும் 2027ல் அனைத்து உயர்மட்டப்பாதை பணிகளும்​, 2028ம்​ ஆண்​டுக்குள்​ அனைத்து சுரங்கப்பாதை பணிகளும்​ முடிக்க இலக்கு நிர்​ணயிக்கப்பட்டுள்ளது. இவ்​வாறு அவர்கள் கூறினர்.

Tags : Chozhanganallur ,Chennai ,Chennai Metro Rail ,Vimco ,
× RELATED திருவள்ளூர் அருகே போந்தவாக்கத்தில்...