×

திருவள்ளூர் அருகே போந்தவாக்கத்தில் கோசாலையில் கொத்தடிமையாக இருந்த 46 பேர் மீட்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே போந்தவாக்கத்தில் கோசாலையில் கொத்தடிமையாக இருந்த 46 பேர் மீட்கப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 20 குடும்பங்களை சேர்ந்த 46 பேர் நடராஜ் என்பவரின் கோசாலைக்கு பணிக்காக வந்துள்ளனர். தினக்கூலிக்காக வந்தவர்களை கூலி தராமல் ஏமாற்றி கொத்தடிமைகளாக வைத்திருந்து வேலை வாங்கியதாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அளித்த புகாரின்பேரில் கோட்டாட்சியர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணை நடத்திய கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், 46 தொழிலாளர்களையும் மீட்டார்.

Tags : Kosala ,Pondavakkam ,Thiruvallur ,PONTAWAKAK ,Chhattisgarh ,Nataraj ,kosal ,
× RELATED சமூக வலைதள பதிவால் பரபரப்பு:...