×

ஸ்டாலின் விளம்பர பாதகைகள் அகற்றம் மாநகராட்சி அதிகாரிகளை திமுகவினர் முற்றுகை

திருப்பூர்,மார்ச்4: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட, 44 வது வார்டு, டூம்லைட் மைதானம் பகுதியில் உள்ள அரசியல் தலைவர்களின் படம் பதித்த விளம்பர பதாகைகளை அகற்ற 3வது மண்டல உதவி ஆணையர் சுப்பிரமணியம், உதவி பொறியாளர் கோவிந்த் பிரபாகர் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சென்றனர். அப்போது அங்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வைத்திருந்த திமுக தலைவர் ஸ்டாலின்  படம் பதித்த விளம்பர பதாகையை அகற்றினர்.
இது குறித்து தகவலறிந்த திமுக தெற்கு மாநகர பொறுப்பாளர் டிகேடி.நாகராசன், நிர்வாகிகள் தம்பி குமாரசாமி, சிதம்பரசாமி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டனர். பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி பெற்று வைக்கப்பட்ட ஸ்டாலின் படம் அடங்கிய விளம்பரங்களை மீண்டும் அதன் இடத்தில் வைத்து சென்றனர். மேலும் இது குறித்து திமுக கட்சியினர் கூறியதாவது: பிளக்ஸ் போர்டுகளை அகற்றும் பணியில் மாநகராட்சியினர் பாரபட்சமாக செயல்படுகின்றனர். மற்ற கட்சியினரின் விளம்பர பதாகைகளை கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். இது ஒருதலை பட்சமான செயல்பாடாகும் என்றனர்.மாநகராட்சியினர் புகார்:அரசியல் தலைவர்களின் படங்களை அகற்ற சென்ற போது மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக திமுகவினர் 15 பேர் மீது தெற்கு காவல் நிலையத்தில் மாநகராட்சி அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.

Tags : Stalin ,
× RELATED அதிகாரப்பூர்வ வெற்றி அறிவிக்கப்படும்...