சாத்தூர்: நெல்லை மாவட்டம், உச்சம்பட்டியை சேர்ந்தவர் குமரவேல் (50). இவர், நேற்று முன்தினம் இரவு நெல்லையில் இருந்து அரசு பஸ்சில் மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். அதே பஸ்சில் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலை சேர்ந்த 10 வயது சிறுமி பெற்றோருடன் மதுரைக்கு வந்தார். பஸ்சில் சிறுமியின் பின் சீட்டில் அமர்ந்திருந்த குமரவேல், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரை பெற்றோர் எச்சரித்தனர். பஸ் சாத்தூரை கடந்தபோது மீண்டும் குமரவேல் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் பயணிகள் சேர்ந்து குமரவேலுக்கு தர்மஅடி கொடுத்து வச்சக்காரப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து குமரவேலை கைது செய்தனர்.
