×

சேலம் ரயிலில் கடத்தி வந்த 20 கிலோ கஞ்சா பறிமுதல்: போலீசை கண்டதும் வீசி சென்ற கும்பலுக்கு வலை

சேலம்: சேலம் வழியாக சென்ற ரயிலில் சோதனையிட வந்த போலீசாரை கண்டதும் 20 கிலோ கஞ்சாவை போட்டு சென்ற கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வடமாநிலங்களில் இருந்து சேலம் வழியாக கேரளா செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு, சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து கேரளா நோக்கி சேலம் வழியாக நேற்று காலை தன்பாத்- ஆலப்புலா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது.

வழக்கமாக இந்த ரயிலில் தான் கஞ்சா பண்டல் அதிகளவில் கடத்தி வரப்படும். இதையடுத்து சேலம் ரயில்வே போலீசார் ரயிலில் ஏறி சோதனை நடத்தினர். அப்போது பொதுப்பெட்டியின் கழிவறை அருகில் சோல்டர் பேக் ஒன்றும், 2 டிராவல்ஸ் பேக்கும் கிடந்தது. அதனை திறந்து பார்த்தபோது, 10 பண்டல் கஞ்சா இருந்தது. போலீசாரை கண்டதும் அதனை கடத்தி வந்த நபர்கள், கழிவறை அருகில் போட்டுவிட்டு ஓடிவிட்டனர். இதில் 20 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து கஞ்சா பண்டலை மீட்ட போலீசார் அதனை கடத்தி வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : SALEM ,Kerala ,
× RELATED திருவாரூர் அருகே இன்று அதிகாலை...