×

‘எங்களுக்குள் கருத்து வேறுபாடில்லை’ நாங்கள் பதவிக்காக எங்கும் செல்லவில்லை: சொல்கிறார் நொந்து நூடுல்சான வேலுமணி

 

கோவை: நாங்கள் பதவிக்காக எங்கும் செல்லவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார். கோவை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று நிருபர்களிடம் கூறியதாவது: தொண்டாமுத்தூரில் தொடர்ந்து 5வது முறையாக வெற்றி பெற்றுள்ளேன். அதற்கு மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதிமுக தான் எங்களின் உயிர் மூச்சு. பதவிக்காக எவரும் செயல்படவில்லை. எங்கும் செல்லவில்லை.

தேர்தலுக்கு முன்பும், பின்னரும் சிலர் தேவையற்ற தகவல்களை பரப்பினர். நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கட்சியின் வளர்ச்சிக்காகவும், தோல்விக்கான காரணங்களை ஆராய்வதற்காகவும் சில கோரிக்கைகளை வைத்தோம். பொதுச்செயலாளர் அவற்றை ஏற்று, கட்சியை மீண்டும் வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறார். சி.வி.சண்முகமும், நானும் ஒற்றுமையாகவே செயல்பட்டு வருகிறோம். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. கட்சியை பலப்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதே எங்களின் நோக்கம்.

கோவையில் 10 வயது சிறுமிக்கு நடந்த கொடூர சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் கலாசாரம் அதிகரித்து வருகிறது. இதை தவெக அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். அதிமுக ஒற்றுமையாக உள்ளது. சிலர் வெளியேறுவதால் கட்சி பலவீனமடையாது. இவ்வாறு அவர் கூறினார். ‘‘தவெகவிற்கு தற்போதும் ஆதரவா? மீண்டும் மாவட்ட செயலாளர் பதவி கிடைக்குமா? என்ற கேள்விக்கெல்லாம் பதில் அளிக்க மறுத்த வேலுமணி, விஜயபாஸ்கர் குறித்த கேள்விக்கு, யூகத்திற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்றார்.

Tags : Vellumani ,Govai ,former ,minister ,S. B. Velumani ,Former Minister ,TONDAMUTHUR ,
× RELATED அரசுமுறை பயணமாக டெல்லி சென்ற முதல்வர் விஜய் சென்னை திரும்பினார்