×

சிறுவளூர் கிராமத்தில் அறுவடை பின்சார் தொழில்நுட்ப பயிற்சி

 

ஜெயங்கொண்டம், மே 23: அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டாரம் சிறுவளூர் கிராமத்தில் அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்பு கூட்டுதல் தொடர்பாக அட்மா திட்ட பயிற்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வேளாண் அறிவியல் விஞ்ஞானி திருமலை வாசனால் அறுவடை பின் பின்சார் தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்பு கூட்டுதல் தொடர்பாக விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் ஜென்சி (பொ), வேளாண்மை அலுவலர் சிந்துஜா, உதவி வேளாண்மை அலுவலர் ராஜகிரி, வட்டார தொழில் நுட்ப மேலாளர் சக்திவேல் மற்றும் உதவி தொழில் மேலாளர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Siruvalur village ,Jayankondam ,Adma ,Ariyalur block, Ariyalur district ,Thirumalai Vasanal ,
× RELATED பாரம்பரியம், இயற்கையை காக்க பனை...