×

தமிழக அரசின் மறு ஆய்வு மனு தள்ளுபடியானதால் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்: கர்நாடக துணை முதல்வர் கறார்

புதுடெல்லி: மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசின் மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இன்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த மறு ஆய்வு மனுவை நேற்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இச்சூழ்நிலையில், அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ள கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ‘கர்நாடகாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான மேகதாது விவகாரத்தில், 177 டி.எம்.சி நீரை விடுவிப்பதை உறுதி செய்வது கர்நாடகாவின் கடமை என நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. இந்த சூழலில் தமிழ்நாடு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தற்போது நிராகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தங்கள் தரப்பிலிருந்து எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும், அதுபற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. நாங்கள் மேகதாதுவில் அணை கட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். கர்நாடக மக்களின் சார்பாக நான் நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையின் நகல் தற்போது எங்களிடம் வந்துவிட்டது. அதனை அடிப்படையாக கொண்டு எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும்’ என்று தெரிவித்தார்.

Tags : Megadatu ,Tamil Nadu government ,Karar ,Deputy ,Karnataka ,New Delhi ,Supreme Court ,Deputy Chief ,T.D. K. Sivakumar ,MEGADATHU DAM ,
× RELATED நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு...