×

தவெக அரசின் செயல்பாடு விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி; மாபெரும் நம்பிக்கை மோசடி: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

சென்னை: தவெக அரசின் செயல்பாடு விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி; மாபெரும் நம்பிக்கை மோசடி என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ‘தேர்தலின்போது 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு முழுமையாக கடன் தள்ளுபடி என வாக்குறுதி தந்தனர். இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கின்றனர். பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் SCAM செய்கிறார்கள். இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM Saar?’ எனவும் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : Davega ,Udayanidi Stalin ,Chennai ,Udayaniti Stalin ,Daveka government ,
× RELATED “கட்சித் தாவல் புகார் உள்ள...