×

நாகை மாவட்டம் கோடியக்கரையில் இருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்கள் மாயம்..!!

நாகை: நாகை மாவட்டம் கோடியக்கரையில் இருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்கள் மாயமாகி உள்ளனர். கோடியக்கரையை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகுகள அன்புச்செல்வன், கணபதி,பொதுவிடை, குமார் ஆகிய நான்கு மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் சென்றனர். இந்த நிலையில், திங்கள்கிழமை கரை திரும்பியிருக்க வேண்டிய மீனவர்கள் நால்வரும் இன்று காலை வரை கரைக்குத் திரும்பவில்லை.

இதனையடுத்து கோடியக்கரை பகுதியில் திங்கள்கிழமை இரவு முதல் கடலில் பலத்த காற்று வீசி வந்தது. அவர்களின் படகு மட்டும் கோடியக்கரை மூணாங்காடு அருகே கரை ஒதுங்கி இருக்கு. பைபர் படகுல சென்ற நான்கு மீனவர்கள் என்ன ஆனார்கள் என தெரியாத காரணத்தினால் அவர்களை தேடும் பணியில் சக மீனவர்கள் இரண்டு படகுகளில் சென்று தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் மாயமானது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Kodiakara ,Nagai district ,Nagai ,Anbuchelvan ,Ganpati ,Pamivida ,Kumar ,Balamurugan ,Kodiakkaraya ,
× RELATED சி.என்.ஜி. எரிவாயு விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்தின எண்ணெய் நிறுவனங்கள்..!