×

செல்வத்தில் கொழிக்கும் விளையாட்டு வீரர்கள் ரூ.2880 கோடி வருவாயுடன் முதலிடத்தில் ரொனால்டோ

 

லண்டன்: கடந்த 2025ம் ஆண்டில் ரூ.2880 கோடி வருவாய் ஈட்டிய போர்ச்சுகல் நாட்டின் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட அதிக வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். போர்ச்சுகலை சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தேசிய அணியின் கேப்டனாகவும், சவுதி அரேபியாவை சேர்ந்த அல் நஸர் கால்பந்தாட்ட அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.

கடந்தாண்டில் இவரது வருவாய், ரூ. 2880 கோடி. இதன் மூலம், ஃபோர்ப்ஸ் பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட, அதிக வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். மெக்சிகோவை சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் கேனெலோ அல்வாரஸ், கடந்தாண்டில் ரூ. 1630 கோடி வருவாய் ஈட்டி, ஃபோர்ப்ஸ் பட்டியலில் 2ம் இடத்தை பிடித்துள்ளார். அர்ஜென்டினாவை சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, ரூ. 1340 கோடி வருவாயுடன் 3ம் இடம் பெற்று அசத்தியுள்ளார். இருப்பினும், மெஸ்ஸியின் வருவாய், ரொனால்டோவை ஒப்பிடுகையில் பாதிக்கும் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தவிர, அமெரிக்காவை சேர்ந்த கூடைப்பந்து போட்டி வீரர் லெப்ரான் ஜேம்ஸ், ரூ. 1322 கோடி வருவாயுடன் 4ம் இடத்தையும், ஜப்பானை சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர் ஷோஹெய் ஒஹ்டானி ரூ. 1224 கோடி வருவாயுடன் 5ம் இடத்தையும் பிடித்துள்ளனர். ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட, அதிக வருவாய் ஈட்டிய டாப் 10 வீரர்கள் பட்டியலில் கால்பந்து வீரர்கள், கூடைப்பந்து வீரர்கள் தலா 3 பேர், பேஸ்பால், ஆட்டோ ரேஸிங், கோல்ஃப், குத்துச் சண்டை ஆகிய துறைகளை சேர்ந்த தலா ஒரு வீரர் இடம்பெற்றுள்ளனர்.

Tags : Ronaldo ,Forbes' ,London ,Cristiano Ronaldo ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு...