×

பெரியபாளையம் ஊராட்சியில் அரசு பள்ளி கட்டிட பணிகள் மந்தம்: விரைந்து முடிக்க வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் மந்தகதியில் நடைபெறும் பள்ளிக் கட்டிட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். பெரியபாளையம் ஊராட்சியில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு பெரியபாளையம், தண்டுமாநகர், ராள்ளபாடி, ஆத்துப்பாக்கம், அரியப்பாக்கம், வேலப்பாக்கம், வடமதுரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 6 முதல் 12ம் வகுப்பு வரை 40க்கும் மேற்பட்ட வகுப்பறைகளில் 850க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். பழைய பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில், கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட வேண்டும் என பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி, பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நபார்டு திட்டத்தின் மூலம் கூடுதல் பள்ளி வகுப்பறைகள் கட்ட ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அதில் 3 தளம் கொண்ட பள்ளி வகுப்பறைகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அதன் கட்டுமான பணிகள் மந்தகதியில் நடந்து வருகிறது. இந்த பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Beriapaliam Uratsi ,Pothukkottai ,Gradhan ,Beriapaliam government high school ,Beriyapaliam ,Uratchi ,Periyapaliam ,Dandumanagar ,Rallabadi ,Athupakkam ,Ariyapakkam ,
× RELATED கோவை அருகே 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது!