ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரத்தில் ஆன்லைன் மூலம் சட்டவிரோதமாக போதை மாத்திரை வாங்கி விற்பனை செய்ய முயன்ற 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள பாரியூர் சாலையில் 3 இளைஞர்கள் சந்தேகத்திற்கு இடமாக அப்பகுதியில் உலா வந்துள்ளார் அப்போது அவர்களிடம் கோபிச்செட்டிப்பாளையம் போலீசார் விசாரணை செய்தபோது அவர்களிடம் வலி நிவாரணி போதை மாத்திரை இருந்தது தெரியவந்துள்ளது.
ஆன்லைனில் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை ஆர்டர் செய்து அதனை கொரியர் மூலமாக கோபிச்செட்டிப்பாளையதில் உள்ள ஒரு தனியார் கொரியர் அலுவலகத்திற்கு வரவழைத்து அதிக விலைக்கு விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இதில் அத்தாணி பகுதியை சேர்ந்த பைன்டர் பாலாஜி, அந்தியூர் தாலுகா தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த கோபிநாத் மற்றும் தர்ஷன்ராஜ் ஆகிய மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் மூலமாக வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி அதனை போதைக்கு பயன் படுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடந்து இது தொடர்பாக தனி படை அமைத்து போலீசார் விசாரிக்க திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் கொடுத்துள்ளனர்.
