×

17 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

 

சென்னை: தமிழகத்தில் 17 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சாய்குமார் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் இருப்பதாவது:

* பொறுப்பு வழங்கப்படாத அதிகாரிகள்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் காத்திகேயன், நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன், பொதுப்பணித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் சரவண வேல்ராஜ், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் ஜி.பிரகாஷ், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் சஞ்சீவனா ஆகியோரிடம் இருந்த துறைகள் வேறு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அதிகாரிகள் புதிய துறைகள் ஒதுக்கப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu government ,Chennai ,IAS ,Tamil Nadu ,Chief Secretary ,Saikumar ,Municipal Administration and Drinking Water Supply Department… ,
× RELATED திருமங்கலம் அருகே குண்டும், குழியுமான...