×

தஞ்சாவூரில் ஏசி காஸ் நிரப்பும் பணியின் போது சிலிண்டர் வெடித்து கடை ஊழியர் பலி: மெக்கானிக் உள்பட 5 பேர் படுகாயம்

 

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் பகுதியில், தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் தரைத்தளத்தில், கே.எப்.சி., உணவு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏசி பழுதானதால் மெக்கானிக் நாஞ்சிக்கோட்ட கணேசன்(43), காஸ் நிரப்பும் பணியில் நேற்று மாலை ஈடுபட்டிருந்தார். சிலிண்டரில் ஏற்பட்ட அழுத்தத்தினால் வெடித்தது. இதில் ஜன்னல், கதவு கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. ஏசி பாகங்களும் வெடித்து சிதறியது. இதில், மெக்கானிக் கணேசன் படுகாயமடைந்தார். கேஎப்சி ஊழியர் ரவிராஜ் (27) இறந்தார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுகின்றனர்.

Tags : Thanjavur ,KFC ,Mary ,Nanjikotta Ganesan ,
× RELATED திருமங்கலம் அருகே குண்டும், குழியுமான...