* சர்க்கரைவள்ளிக் கிழங்கு மாவுச் சத்து, பொட்டாசியம் நிறைந்தது.
* வைட்டமின் – சி, மெக்னீசியம், நார்சத்து இதில் மிதமான அளவு உள்ளன.
* புரதம், கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், சோடியம், தாமிரம் ஆகியவை குறைவாகவும், இரும்பு, பி-காம்ப்ளெக்ஸ், வைட்டமின்கள், ரிபோஃப்ளோவின், தைமின், நியாசின் ஆகியவை மிகக் குறைந்த அளவிலும் இருக்கின்றன.
*செல் பாதிப்பைக் கட்டுப்படுத்தி, திசுக்களை பலப்படுத்தும்.
*மூளைச் சுறுசுறுப்பிற்கும், ரத்தம் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு பயன்படும் சுண்ணாம்பு சத்தும் உள்ளன.
*இதில் ஈரப்பதம் குறைவு. ஆனால், கார்போஹைட்ரேட் அதிகம் இருக்கிறது.
*வயிற்றுக் கடுப்பு, சீதபேதி, மலச்சிக்கல் ஆகியவை குணமாக இக்கிழங்கை அவித்து சாப்பிட்டால் போதும்.
*கணையப் புற்றுநோய் செல்களை சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் சத்துகள் அழிக்கின்றன.
*வயிறு, கழுத்து, நுரையீரல் மற்றும் மார்பக புற்று நோய்களுக்கு காரணமான செல் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது.
*இதய நோய்கள் வரும் அபாயத்தை தடுக்கிறது.
*ரத்தம் உறைவதைத் தடுக்கிறது. ஆரோக்கியம் மற்றும் தோல், நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு துணை புரிகிறது.
*நுரையீரல் மற்றும் தொண்டை புற்று நோய்க்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது.
*குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள், அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களும் இக்கிழங்கை தாராளமாகச் சாப்பிடலாம்.
தொகுப்பு: கே.பிரபாவதி, கன்னியாகுமரி.
