×

எபோலா வைரஸ் பரவலை தொடர்ந்து காங்கோ, உகாண்டாவில் சுகாதார அவசரநிலை அறிவிப்பு

எபோலா வைரஸ் பரவலை தொடர்ந்து காங்கோ, உகாண்டாவில் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கொடிய ‘எபோலா’ வைரஸ் நோய் மீண்டும் மிக அதிவேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. ருவாண்டாவின் இடுரி மாகாணத்தில் எபோலா தொற்று காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு மாகாணத்தில் கடந்த சில வாரங்களாகப் பரவி வரும் இந்த எபோலா வைரஸ் நோய்க்கு, இதுவரை ஒட்டுமொத்தமாக 80 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் எபோலா வைரஸ் அறிகுறி உள்ள நூற்​றுக்​கணக்​கானோருக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. அவர்​களை சுகா​தா​ரத் துறை அதி​காரி​கள் உன்​னிப்​பாகக் கண்​காணித்து வரு​கின்​றனர். எபோலா தொற்று என்பது உடல் திரவங்கள் வழியாக மனிதா்களிடையே மிக வேகமாகப் பரவக்கூடிய ஒரு கொடிய நோயாகும். சிகிச்சை அளிக்கத் தவறினால், உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது.

காங்​கோவை ஒட்டி அமைந்​துள்ள உகாண்​டா, தெற்கு சூடான் போன்ற நாடு​கள் இதனுடன் நெருங்​கிய போக்​கு​வரத்​துத் தொடர்​பைக் கொண்​டிருப்​ப​தால், இந்த நோய் எல்லை தாண்டி பரவக் கூடும் என்ற அச்​ச​மும் அதி​கரித்​துள்​ளது. இந்நிலையில் காங்கோ, உகாண்டாவில் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : CONGO, UGANDA ,Congo ,Ituri province, Rwanda ,
× RELATED தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்