×

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 66 பள்ளி வாகனங்களின் உரிமம் தற்காலிக ரத்து: குறைகளை நிவர்த்தி செய்து சான்று புதுப்பிக்க உத்தரவு

 

காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தகுதியற்ற நிலையில் இருந்த 66 பள்ளி வாகனங்களின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, குறைகளை நிவர்த்தி செய்து சான்று புதுப்பிக்க உத்தரவிடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட பள்ளி வாகனங்களின் வருடாந்திர கூட்டாய்வு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் எஸ்.மாலதி ஹெலன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த வருடாந்திர கூட்டாய்வில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 604 பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அதில் முதல்கட்டமாக நேற்று 432 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இதில், 402 வாகனங்கள் தமிழ்நாடு மோட்டார் வாகனம் பள்ளி பேருந்துகளை வரன்முறை மற்றும் கட்டுப்பாடு சிறப்பு விதிகள் 2012ன் அடிப்படையில் தகுதி காணப்பட்டன. மேலும், 30 வாகனங்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டது. மேலும், 30 வாகனங்களின் குறைகள் காணப்பட்டதால் வாகன தகுதி சான்று ரத்து செய்யப்பட்டு குறைகளை நிவர்த்தி செய்து தகுதி சான்று புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இதில் கோட்டாட்சியர் ரம்யா, இணை போக்குவரத்து ஆணையர் (தெற்கு சரகம்) பொன் செந்தில்நாதன், வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலர் மகாலட்சுமி உடனிருந்தனர்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே காரை கிராமத்தில் அமைந்த்துள்ள தனியார் பள்ளி வளாகத்தில் பள்ளி, கல்லூரிகளில் இயக்கப்படும் பேருந்துகளை ஆய்வு செய்யும் பணி நேற்று நடந்தது. காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ், மாவட்ட கல்வி அலுவலர் கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார போக்குவரத்து அலுவலர் ஆர்.நாகராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் காஞ்சிபுரம் சப்-கலெக்டர் ஆஷிக் அலி கலந்துகொண்டு, பள்ளி வாகனங்ளை ஆய்வு செய்தார். ஆய்வில் 47 பள்ளிகளை சேர்ந்த 304 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் 21 வாகனங்களில் குறைபாடுமேலும், ஓட்டுநர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாமும் நடைபெற்றது.

ஆய்வின்போது வட்டார போக்குவரத்து ஆய்வாளர் து.சிவராஜ், வேலம்மாள் பள்ளி முதல்வர் சுரேஷ்குமார், தலைமை ஆசிரியை சொர்ணம், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பெரும்புதூர்: பெரும்புதூர் அடுத்து வடமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் 300க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி, டிஎஸ்பி கீர்த்திவாசன், வட்டார போக்குவரத்து அலுவலர் விஜயகுமார், மோட்டார் வாகன ஆய்வாளர் கார்த்திக் உள்ளிட்டோர், பள்ளி பேருந்துகளில் முதலுதவி பெட்டிகள், படிக்கட்டுகள், அவசர கால கதவு, தீயணைப்பு கருவிகள் பராமரிக்கப்படுகிறதா, பிரேக் பிடிக்கிறதா, ரிவர்ஸ் கேமரா வேலை செய்கிறதா எனபது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், திடீரென வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டால், ஓட்டுநர்கள் அதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து தீயணைப்பு துறை மூலம், செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், வேக கட்டுப்பாடு கருவி, அவசரகால கதவு, ரிவர்ஸ் கேமரா, செயல்படாமல் இருந்த 15 பேருந்துகள் நிராகரிக்கப்பட்டது.

Tags : Chengalpattu ,Kanchipuram ,Kancheepuram ,Chengalpattu District School Vehicles Annual Co-ordination District Collector's Office ,
× RELATED தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்