ஐதராபாத் அருகே சிறப்பு விரைவு ரயிலில் பயங்கர தீ: பயணிகள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு

திருமலை: ஐதராபாத் அருகே சிறப்பு விரைவு ரயிலில் ஏசி பெட்டியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நம்பள்ளி ரயில் நிலையத்தில் உள்ள நான்காவது நடைமேடையில் நேற்று ஐதராபாத்-ஜெய்ப்பூர் சிறப்பு விரைவு ரயில் நிறுத்தப்பட்டிருந்தது. பயணிகள் யாரும் இல்லாத நிலையில் ஏசி பெட்டிகளான பி1 மற்றும் பி2 ஆகியவற்றில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

தகவல் கிடைத்ததும், தீயணைப்பு படையினர் 3 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அணைத்தனர். இதனால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பெட்டிகளில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதற்கிடையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: