×

பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து டெல்லியில் அதிகரித்த CNG விலை.!!

டெல்லி: சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தலைநகர் டெல்லியில், சிஎன்ஜி விலைஅதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை, பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்துடன் சேர்த்து, டெல்லியில் CNG-யின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான நொய்டா, காஜியாபாத் மற்றும் குருகிராம் ஆகிய இடங்களில் CNG-யின் விலை ரூ.2 வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

தலைநகர் டெல்லியில் முன்பு 1 கிலோ CNG-யின் விலை ரூ.77.09-ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.2 அதிகரிக்கப்பட்டு ரூ.79.09-ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவிற்கும் – ஈரானுக்கும் இடையிலான போர் பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் வர்த்தக கப்பல் போக்குவரத்து முற்றிலுல் தடைப்பட்டு உள்ளது.

உலகின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் 20 சதவீத அளவிற்கான போக்குவரத்துப் பாதையாக ஹோர்முஸ் நீரிணை இருக்கிறது. இங்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து தடை காரணமாக, உலகம் முழுவதும் எரிசக்தி பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தவிர்க்க முடியாத காரணத்தால் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து CNG விலையிலும் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் மக்களை நேரடியாக பாதிக்க கூடும். ஏனென்றால் தற்போது பெரும்பாலான ஆட்டோக்கள், டாக்சிகள் CNG-யைக் கொண்டே இயக்கப்படுவதால், இந்த விலை உயர்வு தினசரி பயணம் மேற்கொள்வோருக்கு கூடுதல் சுமையாக மாறும். CNG விலை அதிகரிப்பு நாட்டின் பிற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Delhi ,India ,West Asia ,
× RELATED வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து...