×

ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

ஜெயங்கொண்டம்,மே 13: ஜெயங்கொண்டம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த இருவரை ஜெயங்கொண்டம் போலீசார் கைது செய்தனர். ஜெயங்கொண்டம் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சின்னவளையம் மேம்பாலம் அருகே வாகன சோதனை ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த ஜெயங்கொண்டம் வடக்கு தெருவை சேர்ந்த சங்கர் மகன் அணில் என்கிற பிரேம்குமார்(25) இருசக்கர வாகனத்தில் வந்தார்.

அவரை நிறுத்தி சோதனை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறிக் கொண்டிருந்தார். அவர் வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் அரை கிலோ கஞ்சா இருந்ததை போலீசார் பறிமுதல் செய்து பிரேம்குமாரையும் கைது செய்தனர்.

இதேபோல், ஜெயங்கொண்டம் சப்-இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன் தலைமையிலான போலீசார் செந்துறை பிரிவு ரோடு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த ஜெயங்கொண்டம் வடக்கு தெருவை சேர்ந்த நாகராஜ் மகன் சந்தோஷ் குமார்(19), முன்னுக்கு பின முரணாக பதில் அளித்த போது அவரது சட்டை பையில் இருந்து 10 கிராம் கஞ்சாவை போலீசார் கண்டு பறிமுதல் செய்தனர். மேலும் சந்தோஷ் குமாரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags : Jayankondam ,Sub-Inspector ,Prabhakaran ,Chinnavelyam ,Shankar Magan ,Jayankondam North Street ,
× RELATED பொன்பரப்பி மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா