- கால்நடை பல்கலைக்கழகம்
- பெரம்பலூர்
- கால்நடை மருத்துவம்
- பல்கலைக்கழக
- பெரம்பலூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும்
- ஆராய்ச்சி
- மையம்
- செங்குணம் கைக்கட்டி
- எலம்பா ப்ளூ அஞ்சல் அலுவலகம்
பெரம்பலூர்,மே 13: பெரம்பலூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் கறவை மாடு வளர்ப்பு இலவச பயிற்சி முகாம் நாளை (14ம்தேதி) நடக்கிறது. பெரம்பலூர் செங்குணம் கைகாட்டி எதிர்புறத்தில் (எளம்பலூர் அஞ்சல்) அமைந்துள்ள பெரம்பலூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடு வளர்ப்பு குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி வருகின்ற நாளை (14ம்தேதி) காலை 10.30 மணி முதல் 2 மணி வரை நடைபெற உள்ளது.
பயிற்சியில் சேர விரும்பும் வேளாண் பெருமக்கள் வேலை நாட்களில் காலை 10 மணிக்கு மேல் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு (9123548890/ 9677829651 / 9884269702) வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களின் பெயர்களை பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் முதலில் வரும் 20 நபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும். ஆதார் நகல் எடுத்து வர வேண்டும். மதிய உணவு மற்றும் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படமாட்டாது.
