×

உளுந்தூர்பேட்டை அருகே பைக் விபத்தில் கரூரை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் பலி

உளுந்தூர்பேட்டை, மே 13: கரூர் மாவட்டம் கரூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் தினேஷ் (36), இவர் வந்தவாசியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கரூரில் இருந்து பைக்கில் உளுந்தூர்பேட்டை வழியாக விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் தனியார் பள்ளி எதிரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்த தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற திருநாவலூர் காவல் நிலைய போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Karur ,Ulundurpet ,Ulundurpattai ,Sinivasan ,Dinesh ,Karur district, Karur district ,Vandwasi ,Viluppuram ,
× RELATED தென்தாமரைக்குளம் அருகே மகளுடன் இளம்பெண் மாயம்