×

முத்துப்பேட்டை அருகே ரயில் அடிப்பட்டு மூதாட்டி பலி

 

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு மனைவி குப்பம்மாள்(80) இவர் இன்று மாலை சுமார் 5.50மணிக்கு அப்பகுதியில் உள்ள ரயில்வே பாதையில் பட்டுக்கோட்டையிலிருந்து திருவாரூர் செல்லும் டெமூ ரயிலில் சென்றுக்கொண்டிருந்தபோது அங்குள்ள ரயில்வே கேட் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் மாடு ஒன்று நின்றதை நின்றதை கண்ட மூதாட்டி குப்பம்மாள் மாட்டை விரட்ட சென்றபோது எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் கடந்த அந்த ரயில் மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் மூதாட்டி உடல் சிதைந்து பலியானர்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் அங்குவந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு திருவாரூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர் அதன்பேரில் அங்குவந்த ரயில்வே போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Ancestor ,Muthuppet ,Thiruvarur ,Tangarasu wife ,Gupammal ,Thambikottai Kalakkad village ,Muthuppet, Thiruvarur district ,Patukkottai ,
× RELATED வீட்டுக்குள் புகுந்து மாணவிக்கு தவெக...