×

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம்

கரூர், மே. 12: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் கரூரில் நடைபெற்றது. இதில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கரூர் அரசு ஊழியர் சங்க கட்டிட வளாகத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம்நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, மாநில தலைவர் மணிமேகலை தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர்கள் டேவிட் ராஜன், சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட செயலாளர் அமுதன் வரவேற்றார். மாநில பொருளாளர் கணேசன் வரவு செலவு அறிக்கை வாசித்தார்.

மாவட்ட தலைவர் ராஜா, பொருளாளர் தமிழரசி உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். நிறைவாகமாநில துணைப் பொதுச்செயலாளர் முருகன் நன்றி கூறினார்.இந்த கூட்டத்தில், தமிழ்நாடு முதல்வராக பதவி ஏற்றுள்ள ஜோசப் விஜய்க்கும், அவரின் அமைச்சரவைக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வது. தமிழக வெற்றிக் கழக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், நலன் சார்ந்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றித்தரநடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Tamil Nadu Primary School Teachers' Alliance State Executive Committee Meeting ,Karur ,Tamil Nadu Primary School Teachers' Alliance State Executive Committee ,Meeting ,Karur Government Employees' Union ,
× RELATED தோகைமலை அருகே 2 குழந்தைகளை தவிக்கவிட்டு இளம்பெண் மாயம்