×

தோகைமலை அருகே 2 குழந்தைகளை தவிக்கவிட்டு இளம்பெண் மாயம்

தோகைமலை, மே 28: குழந்தைகளை தவிக்கவிட்டு மாயமான பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  கரூர் மாவட்டம் தோகைமலை காவல்சரகம் கழுகூர் ஊராட்சி கழுகூர் பொன்னன் என்பவரது மனைவி காளியம்மாள் (33). இவர் கரூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் டெக்ஸ் கம்பெனியில் வேலை செய்கிறார். தம்பதிக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நநடந்து ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு காளியம்மாள் கோபித்துக்கொண்டு செல்வதும் வழக்கம். இந்நிலையில் கடந்த 11ம் தேதி காலை 8 மணி அளவில் காளியம்மாள், வழக்கம்போல் டெக்ஸ் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் மாலை வெகுநேரமாகியும் காளியம்மாள் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொன்னன், கரூர் மற்றும் அவர்களது உறவினர்கள் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் மாயமான காளியம்மாள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பொன்னன் தோகைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிந்த போலீசார் மாயமான காளியம்மாளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Tags : Thogaimalai ,Kaliammal ,Ponnan ,Thogaimalai Kavalcharakam ,Thogaimalai Panchayat, Thogaimalai, Karur District ,Karur ,
× RELATED சின்னதாராபுரம் அருகே சட்டவிரோதமாக மது விற்ற பெண் கைது