×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 குறைந்து சவரனுக்கு ரூ.1,12,800க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 குறைந்து சவரனுக்கு ரூ.1,12,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவி வரும் அரசியல் மாற்றங்கள், எப்போதும் தங்கம் விலையில் எதிரொலிப்பது வழக்கம். அந்த வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்படப் போவதாக வெளியாகியுள்ள தகவல்கள், உலகப் பொருளாதாரத்தை புதிய பாதையில் தள்ளியுள்ளது. இதனால் சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், வியாழக்கிழமை சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,13,200க்கு விற்கப்பட்டது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் 14,150க்கு விற்பனையானது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.275க்கு விற்பனையானது. இதனையடுத்து வெள்ளிக்கிழமை மற்றும் நேற்று முன்தினம் சென்னையில் ஆபரணத்தங்கம் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.14,150க்கும் சவரன் ரூ.1,13,200க்கும் விற்கப்பட்டது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ரூ.280க்கு விற்கப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய முன்தினம் விலையிலேயே தங்கம் விற்பனையானது. சென்னையில் இன்று மார்க்கெட் தொடங்கிய நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 குறைந்து சவரனுக்கு ரூ.1,12,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,100க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.285க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai ,United ,States ,Iran… ,
× RELATED சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ....