×

திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதே நிலையில் தொடரும்: மாநில உயர்மட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

 

சென்னை: தமிழக அரசியலில் நீண்ட காலமாக திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதே நிலையில் தொடரும் என்று மாநில உயர்மட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில உயர்மட்ட குழு கூட்டம் நேற்று தேசிய தலைவர் காதர் மொகிதீன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வாணியம்பாடி, பாபநாசம் ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்று, முறையே எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் பாஷா மற்றும் ஏ.எம்.ஷாஜகான் ஆகிய இருவரும் சட்டமன்ற உறுப்பினர்களாகி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் அரசு அமைப்பதற்கு இன்னும் இரண்டு சட்டமன்ற தொகுதிகளின் உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இரண்டு உறுப்பினர்களின் ஆதரவை வேண்டி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

தமிழ்நாட்டில் ஜனநாயக முறையிலான அரசு அமைப்பதற்கு உதவ வேண்டிய கட்டாயம் ஜனநாயக கடமையாக இருக்கிறது. இந்த ஜனநாயக கடமையை செய்வதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்த மாநில அவசர உயர்மட்ட குழு முடிவு செய்கிறது. தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் நிபந்தனையற்ற ஆதரவளித்து எல்லா வகையிலும் ஒத்துழைத்து துணைபுரிவர் என்பதை இக்கூட்டம் தெரிவிக்கிறது.

தமிழக வெகுஜன மக்கள் குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வும் எதிர்பார்ப்பும் ஜனநாயக முறையிலான அரசு உருவாக்கப்பட வேண்டும் என்பதே ஆகும். தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி என்பது வரவேற்புக்கு உரியது அல்ல என்பதையும் ஜனநாயக அரசு உருவாக்குவதை தவிர்த்தால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு விடும் என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உயர்மட்டக் குழு கருதுகிறது.

தமிழகத்தின் பாரம்பரியத்தை பேணிக் காப்பதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்த முடிவு எடுத்து அறிவிக்கிறது. தமிழக அரசியலில் நீண்ட காலமாக திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதே நிலையில் தொடரும். தமிழகத்தில் ஜனநாயக முறையிலான ஆட்சி உருவாவதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில உயர்மட்ட குழு இந்த தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது.

Tags : Indian Union Muslim League ,DMK ,Chennai ,Tamil Nadu ,Indian Union Muslim League… ,
× RELATED இவ்வளவு வெளிப்படையாக “யானை...