×

‘இப்பத்தான் பெரும்பான்மையே கிடைச்சிருக்கு…’போஸ்டரில் அமைச்சர் ஆனார் காங். எம்எல்ஏ: தவெக நிர்வாகிகள் கடும் அதிருப்தி

 

மேலூர்: சட்டசபை தேர்தலில் மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் போட்டியிட்டார். இவர் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பால் வெற்றி பெற்றார். வெற்றிச் சான்றிதழை வாங்கியவுடன் டெல்லி, சென்னை என்று சுற்றி வரும் அவர், இதுவரை மேலூர் தொகுதி மக்களுக்கு நன்றி கூறவோ, இங்கு தனது வெற்றிக்கு உழைத்த யாரையும் சந்தித்து நன்றி தெரிவிக்கவோ வரவில்லை.

இந்நிலையில் மேலூர் நகரெங்கும், மேலூர் மக்களின் அன்பு தலைவர், மேலூர் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் விஸ்வநாதன், வெல்க, வளர்க, வாழ்த்துக்கள் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. 5 நாட்களாக தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாத சூழலில், நேற்றுதான் பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவு கிடைத்துள்ளது. இன்னும் தவெகவினரே தங்களை எந்த துறைக்கும் அமைச்சர் என குறிப்பிட்டு வெளியே கூறாத நிலையில், காங். எம்எல்ஏவை அமைச்சர் என குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டியிருப்பது, தவெக நிர்வாகிகள் தரப்பில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

Tags : Kang ,MLA ,Dhaka ,Malur ,Congress ,Viswanathan ,Madurai ,Dimuka ,Delhi ,Chennai ,
× RELATED தவெக ஆட்சியில் காட்சி காட்சியாக...