தஞ்சாவூர், மே 9: தஞ்சை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி வாக்கு சதவீதம் கணிசமாக குறைந்துள்ளது.தமிழகத்தில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலைப் போல் இந்த 2026 சட்டமன்றத் தேர்தலிலும் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப்போட்டியிட்டது. ஆனால் கடந்த 2021 தேர்தலில் 234 தொகுதிகளில் தோல்வியை தழுவினாலும் 6.60 சதவீதம் அளவிற்கு நாம் தமிழர் கட்சி வாக்குகள் பெற்றது. ஆனால் இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளில் தோல்வியடைந்தும் அதன் வாக்கு சதவீதம் கணிசமாக குறைந்தது.
