×

தந்தை ஹேன்ஸ் ரோவர் பள்ளி பெரம்பலூர் அளவில் மூன்று இடங்கள் பெற்று சாதனை

 

பெரம்பலூர், மே 9: பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி, மார்ச் – 2026ல் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் 600க்கு 591 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளது.
மேலும் ரோவர் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் ஆங்கில வழிப்பிரிவில் பயின்ற மாணவர்கள் எஸ்.ஜனனி – 591 மதிப்பெண்களும், ஆர். கோபிகா – 586, ஆர்.நிஷாந்த் – 586, எஸ்.திவ்யா – 585 மதிப்பெண்கள் பெற்று எம்பள்ளி அளவில் முதல் மூன்று இடம் பெற்றவர்களை மேலாண் தலைவர் டாக்டர். கி.வரதராஜன், பள்ளியின் தாளாளர் ஜான் அசோக்குமார் பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள். அவர்களுடன் பள்ளியின் இயக்குநர், தலைமையாசிரியர், ஆங்கிலவழி முதல்வர், துணை முதல்வர் மற்றும் உதவித்தலைமையாசிரியர்கள், அலுவலக மேலாளர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பாராட்டினர்

 

Tags : Father Hans Rover School ,Perambalur ,Hans Rover Higher Secondary School ,Rover School of Excellence English… ,
× RELATED பொன்பரப்பி மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா