×

நுணாக்காடு ஊராட்சியில் புதிய ரேஷன் கடையை திறக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

 

திருத்துறைப்பூண்டி, மே 9: திருத்துறைப்பூண்டி அருகே நுணாக்காடு ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் பயன் பெறும் வகையில் ஆட்டூர் பகுதியில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடை பல ஆண்டுகளாக வாடகை இடத்தில் இயங்கி வருகிறது. சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் ரூ. 13.56 லட்சம் மதிப்பீட்டில் பொது விநியோக விற்பனை கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. கட்டப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரையிலும் கட்டிடம் திறக்கப்படாமல் உள்ளது.உடனடியாக புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

Tags : Nunakadu panchayat ,Thiruthuraipoondi ,
× RELATED தென்தாமரைக்குளம் அருகே மகளுடன் இளம்பெண் மாயம்