×

வரும் கல்வியாண்டிற்காக முதல் வகுப்பில் 2,143 மாணவ, மாணவிகள் புதிதாக சேர்ப்பு

 

திருவாரூர், மே 9: திருவாரூர் மாவட்டத்தில் வரும் கல்வியாண்டிற்காக தற்போதே அரசு பள்ளிகளின் முதல் வகுப்பில் 2 ஆயிரத்து 143 மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 1 முதல் 10 வகுப்புகள் வரையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், ஜாமென்ட்ரி பாக்ஸ், பேனா, பென்சில், ஸ்கூல் பேக், காலனிகள் மற்றும் சத்துணவு திட்டத்தில் பயனடைந்து வரும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 4 செட் சீருடைகள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 75 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

 

Tags : Tiruvarur ,Tamil Nadu ,
× RELATED தென்தாமரைக்குளம் அருகே மகளுடன் இளம்பெண் மாயம்