×

புதுச்சேரி மற்றும் காரைக்கால் அனைத்து தனியார் பள்ளிகளின் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் தேர்ச்சி விவரம்

புதுச்சேரி: கடந்த மார்ச் 2026 இல் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இருக்கும் தனியார் பள்ளிகளில் படித்த 3890 மாணவர்களும் 3607 மாணவிகளும் ஆக மொத்தம் 7497 மாணவர்கள் தேர்வு எழுதினர். இன்று (08.05.2026) வெளியான தேர்வு முடிவுகளின் படி தனியார் பள்ளிகளில் பயின்ற 7390 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 3811 மாணவர்களும் 3579 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 2025-26 ஆம் ஆண்டின் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 98.57 % ஆகும். புதுச்சேரி பகுதியில் தேர்ச்சி விகிதம் 98.65% மற்றும் காரைக்கால் பகுதியில் தேர்ச்சி விகிதம் 97.67%. புதுச்சேரி & காரைக்கால் பகுதியில் 100% பெற்ற பள்ளிகள் எண்ணிக்கை 63, இதில் புதுச்சேரி பகுதியில் 100% பெற்ற பள்ளிகள் எண்ணிக்கை 54 மற்றும் காரைக்கால் பகுதியில் 100% பெற்ற பள்ளிகள் எண்ணிக்கை 09 ஆகும்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் தனியார் பள்ளிகளில் பாடவாரியாக 100/100 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 500 ஆகும் அதில் இயற்பியலில் 3 மாணவர்களும், வேதியியலில் 6, உயிரியலில் 9, கணிப்பொறி அறிவியலில் 190, கணிதத்தில் 5, தவிரவியலில் 01, விலங்கியல் 01, பொருளியலில் 12, வணிகவியலில் 27, கணக்கு பதிவியலில் 36, வணிக கணிதத்தில் 13, கணிப்பொறி பயன்பாட்டில் 69, வரலாற்றில் 03, தமிழ் மொழியில் 02 மற்றும் பிரென்ச் மொழியில் 123 மாணவர்களும் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

Tags : Puducherry ,Karaikal ,
× RELATED திண்டிவனம் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து