மால்மோ: டெபெ சிகெமான் கோப்பை செஸ் போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி, சீனாவின் ஜு ஜினெரை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தார். சுவீடனின் மால்மோ நகரில் டெபெ சிகெமான் கோப்பை செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. 5வது சுற்றுப் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி, சீனாவின் ஜு ஜினெர் உடன் மோதினார். இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அர்ஜுன் அபார வெற்றி பெற்றார். 6 போட்டிகள் முடிவில் 4.5 புள்ளிகளுடன் அர்ஜுன் எரிகைசி முதலிடம் பிடித்தார். அவருக்கு பின்னால், நார்வேயை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன், எர்டோக்மஸ் அரை புள்ளிகள் பின்தங்கி உள்ளனர். கடைசி சுற்றில் எரிகைசி, அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஆண்டி உட்வார்ட் உடன் வெள்ளை காய்களுடன் மோதவுள்ளார். மற்றொரு போட்டியில் கார்ல்சன் – எர்டோக்மஸ் களம் காணவுள்ளனர்.
