×

அசாமில் வரும் 12ம் தேதி புதிய அரசு பதவியேற்பு

 

கவுகாத்தி: அ​சாம் சட்டமன்ற தேர்​தலில் பாஜ தலைமையிலான தேஜ கூட்​ட​ணி, மொத்​தமுள்ள 126ல் 102 இடங்களில் வெற்றி பெற்​று 3-வது முறை​யாக ஆட்​சியை தக்கவைத்து கொண்​டது. இதனிடையே, அசாம் மாநிலத்​துக்​கான மத்​தி​ய பார்​வை​யாளர்​களாக ஒன்றிய அமைச்​சர் ஜே.பி. நட்டா, அரியானா முதல்​வர் நயாப் சிங் சைனி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்​ளனர். ஓரிரு நாளில் பாஜ​வின் மத்​தி​ய பார்வை​யாளர்​கள் கவுகாத்திக்கு வரு​வார்​கள் என்​றும், அதன் பிறகு புதி​தாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட எம்எல்ஏக்​கள் அடுத்த முதல்​வரை தேர்ந்​தெடுப்​பார்​கள் என்​றும் தகவல்​கள் தெரிவிக்கின்​றன.

எனினும், ஹிமந்த பிஸ்வா சர்​மாவே மீண்​டும் முதல்​வ​ராக தேர்ந்​தெடுக்​கப்பட அதிக வாய்ப்​புள்​ள​தாக மாநில பாஜ வட்டாரங்​கள் தெரிவிக்​கின்​றன. புதிய அரசு பதவி​யேற்பு விழா வரும் 12ம் தேதி நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்​மா, ஆளுநர் லட்​சுமண் பிர​சாத் ஆச்சார்யாவிடம் தனது ராஜி​னாமா கடிதத்தை நேற்று சமர்ப்பித்தார். புதிய முதல்​வர் மற்​றும் அமைச்​சரவை நியமிக்கப்படும் வரை தற்​காலிக​மாக பதவி​யில் தொடருமாறு ஆளுநர் கேட்டு கொண்டு உள்ளார்.

Tags : Assam ,Gawwati ,Baja ,led Deja ,Assam Assembly ,Union Minister ,J. B. Nata ,Ariana ,
× RELATED ஈரானில் வணிக வளாகத்தில் தீ: 11 பேர் முச்சு திணறி உயிரிழப்பு