×

மாங்காய் துவையல்

தேவையானவை:
தோல் சீவி லேசாக அரிந்த மாங்காய் துண்டுகள் – 1 கப்
தேங்காய் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
அரிந்த மாங்காயுடன் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து அரைக்கவும். இந்த விழுதை அப்படியே சாப்பிடலாம். அல்லது சூடான சாதத்தில் இந்த விழுதை போட்டு நெய் விட்டும் கலந்து சாப்பிடலாம். ரசம் சாதம், தயிர் சாதத்துக்கும் தொட்டு சாப்பிடலாம். இந்த துவையல் கிளி மூக்கு மாங்காயில் செய்தால்தான் ருசியாக இருக்கும்.

Tags :
× RELATED சுண்டல் சாதம்