தேவையானவை:
ஜெல்லி பவுடர் – 100 கிராம்
ஐசிங் சுகர் – 300 கிராம்
பால் – 1 1/2 லிட்டர்
ஃப்ரஷ் கிரீம் – 300 மில்லி
செர்ரி பழம் – 100 கிராம்
வெனிலா எசென்ஸ் – 3 ஸ்பூன்.
செய்முறை:
பாலை கொதிக்க வைத்து நன்கு சுண்டக் காய்ச்சி இறக்கி ஆற வைக்க வேண்டும். ஜெல்லி பவுடரை கொதிக்கும் நீரில் கட்டிகள் இல்லாமல் கரைத்து ஆற வைக்கவும். ஆறிய பாலில் ஜெல்லி கலவையை வடிகட்டி சேர்க்கவும். பிறகு ஐசிங் சுகர், க்ரீம், எசென்ஸ், செர்ரி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கி, ஐஸ் கப்புகளில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும். சுவையான ஜெல்லி ஐஸ்கிரீம் ரெடி.
