போச்சம்பள்ளி, மே 1: போச்சம்பள்ளி அருகே உள்ள வடம்பலம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. நாள்தோறும் அம்மனுக்கு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. வேண்டுதல் வைத்த பக்தர்கள், அம்மனுக்கு கூழ் வார்த்தனர். தொடர்ந்து மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. பம்பை வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர். பின்னர் கோயில் முன் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
