×

தவெகவின் வெற்றியை கரூரில் பலியானோருக்கு சமர்ப்பிக்கிறோம்: ஆதவ் அர்ஜுனா பேட்டி

சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா லயோலா கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்பொழுது அவர் பேசியதாவது; எங்களை வெற்றிபெற வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த வெற்றியினை கரூரில் உயிரிழந்த எங்கள் குடும்பத்தைச் சார்ந்த 41 உறவுகளுக்கு நாங்கள் சமர்ப்பிக்கிறோம். எங்களை பத்து தொகுதிகள் கூட வெற்றி பெறமாட்டார்கள் என்று கூறினார்கள். பொதுமக்களும், பெண்களும், இளைஞர்களும் எங்களுக்கு இந்த அளவு வெற்றியைக் கொடுத்துள்ளார்கள். பல தடைகளை கடந்து எங்களுக்கு வெற்றியைக் கொடுத்துள்ளார்கள், என்றார்.

Tags : Thaweka ,Adhav Arjuna ,Chennai ,Tamil Nadu Victory Party ,Election Management General Secretary ,Loyola College ,
× RELATED சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற...