தமிழக தேர்தலில் தொடர்ந்து முன்னிலை வகித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக.! செங்கோட்டையன் வெற்றி

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், துவக்கம் முதலே நடிகர் விஜய்யின் தவெக, தொடர்ந்து முன்னிலை வகித்து மிகப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது. இந்நிலையில் அக்கட்சி சார்பில் கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிட்ட செங்கோட்டையன் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து கே.ஏ.செங்கோட்டையன் 10-ஆவது முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார்.

இவரை தவிர தூத்துக்குடி, தாம்பரம், தஞ்சை, மதுரை தெற்கு,அரக்கோணம்,மாதவரம் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்று உள்ளனர். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளரும், நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பருமான ஸ்ரீநாத் வெற்றி பெற்றுள்ளார். தாம்பரம் தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் சரத் குமார் , தஞ்சை தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் விஜய் சரவணன், மதுரை தெற்கு தவெக வேட்பாளர் எம்.எம்.கோபிசன்,மாதவரம் தவெக வேட்பாளர் விஜய்பிரபு ஆகியோர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

Related Stories: