×

தபால் வாக்கு: பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் முன்னிலை!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழகத்தில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 5.73 கோடி வாக்காளர்களில் 4.88 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் 85.10 சதவீத வாக்குப்பதிவு பதிவாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இந்த நிலையில், பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் உள்ளார். இவரைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகரும், மூன்றாம் இடத்தில் பாமக வேட்பாளர் திலகபாமாவும் உள்ளனர். இதைபோல திரு.வி.க.நகர் தொகுதியில் தவெக வேட்பாளர் எம்.ஆர்.பல்லவி முன்னிலையில் உள்ளார்.

Tags : Tevag ,Vijay ,Perambur ,Chennai ,Tamil Nadu assembly elections ,Tamil Nadu ,
× RELATED மூன்று சட்டமன்ற தொகுதியில் முதல் சுற்று வாக்குகள் விவரம்