சென்னை: வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.993 உயர்ந்தது. விலை உயர்வை அடுத்து டெல்லியில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.3071.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.968 உயர்ந்து ரூ.3237க்கு விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக எரிவாயு தட்டுப்பாட்டால் வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.
